யார் பண்ணைக்காரர்..? தன் வாழ்க்கை மற்றும் மறைந்த தந்தையை பற்றி பொய் பேசி வருகிறார் அண்ணாமலை - அதிமுக சிங்கை ராமச்சந்திரன் சாடல்.

தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தார் பற்றியும் உண்மைக்குப் புறம்பான விமர்சனங்களை முன்வைத்து வரும் அண்ணாமலை, தனது மறைந்த தந்தையை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.


கோவை: தனது கல்வி குறித்தும், 76 ஏக்கர் நிலத்திற்கு உரிமைக்காரர் என்று தவறான தகவல்களை, பாஜக வேட்பாளர் அண்ணாமலை பரப்பி வருவதாக, அதிமுகவின் கோவை பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பெரும் போராட்டத்தை கடந்து வந்துள்ள தான், ரூபாய் 2000 வாடகை வீட்டில் இருந்து, தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்ததாகவும்,தனது தந்தையின் இறுதி சடங்குக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எனவே, தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தார் பற்றியும் உண்மைக்குப் புறம்பான விமர்சனங்களை முன்வைத்து வரும் அண்ணாமலையின் பேச்சால், தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மன உளைச்சலில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக, தனது மறைந்த தந்தையை அவமதித்ததற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

ஊழல் பற்றிப் பேசும் அண்ணாமலை மற்றும் அவரது கட்சி, ரூ.6000 கோடி தேர்தல் பத்திர ஊழலில் ஈடுபட்டதாகவும், அண்ணாமலையின்உறவினர்கள் குவாரிகளை வைத்திருப்பதாக எழும் குற்றச்சாட்டுகளைக் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

வரும்.தேர்தலில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெற்றால் தானும், தன்னுடன் இருக்கும்10 பேரும் அரசியலை விட்டு விலக தயாராக உள்ளதாக சவால் விடுத்தார்.

பாஜகவை நம்ப முடியுமா என்ற கேள்வியை எழுப்பிய அதிமுக வேட்பாளர், மறைந்தவர்களை பற்றி அநாகரிகமாகஅண்ணாமலை பேசியதை மீண்டும் சுட்டிக்காட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...