நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

கடந்த 25ம் தேதி கடநாடு கிராமத்தில் முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக, எல்.முருகன் மீது தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி தேனாடுகம்பை காவல்துறையினர் அவர் மீது இன்று (மார்ச்.29) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25ம் தேதி கடநாடு கிராமத்தில் முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக, எல்.முருகன் மீது தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...