கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கம் ஆதரவு

இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


கோவை: அயோத்தியில் ராமர் ஆலயம் அமைத்திட்ட மோடிக்கு கோவையில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் கோவையில் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக கோவை மாவட்ட தலைவர் வெங்கட துரைபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தில் 5 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் குடும்பத்தினர் உள்ளனர்.



இந்த நிலையில் இன்று கோவை இடிகரை பகுதியில் தேசிய வாக்காளர் பேரவையுடன் இச்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் நாடு 11 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக சங்கத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் குடும்பத்தினர் பாஜகவிற்கு வாக்களிக்க உள்ளோம். கோவையில் போட்டியிடும் அண்ணாமலை மக்களுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளதாகவும், எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெறச் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...