கவுண்டம்பாளையத்தில் குடிநீர் கேட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் போராட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் முதலே தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், தண்ணீர் கேட்டால் கழிவறையை பயன்படுத்தாதீர்கள், வாசிங்மெசின் பயன்படுத்தாதீர்கள் என்று அதிகாரிகள் கூறுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் அரசு பணியாளர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தண்ணீர் வராத காரணத்தினால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



இதையடுத்து நேற்றிரவு நூற்றுக்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்பு வாயிலில் அமர்ந்து திடீர் உள் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் இந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செல்லும் நுழைவு வாயிலில் மறியலில் ஈடுபட்டதன் காரணமாக வாகனங்கள் எதுவும் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரச படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தண்ணீர் வேண்டும், தண்ணீர் வேண்டும் என கைகளை தட்டி பாட்டு பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது கடந்த பிப்ரவரி மாதம் முதலே தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், தண்ணீர் கேட்டால் நீங்கள் கழிவறையை பயன்படுத்தாதீர்கள், வாசிங்மெசின் பயன்படுத்தாதீர்கள் என்றுதான் கூறுகிறார்கள். மேலும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பதால் தங்களால் வெளியில் இருந்து தண்ணீர் கூட வாங்கி ஊத்த முடிவதில்லை என்று கூறினர்.

இதனையடுத்து ஹவுசிங் போர்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணி நேரத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி அளித்தன்பேரில் மக்கள் கலைந்துசென்றனர். பிரச்சனை தீர்க்கப்பட்டவிட்டால் போராட்டம் தொடரும் என மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...