கோ பேக் மோடி, கெட் அவுட் மோடி- கோவையில் திமுகவினர் நூதன பிரச்சாரம்

ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.



கோவை: நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரையும் சந்தித்து உதய சூரியனுக்கு வாக்களிக்க கோரி திமுகவினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

அப்போது, எதற்காக கெட் அவுட் மோடி என கூறுகிறோம் என விளக்கினர். கடந்த ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்பதையும், எதற்காக உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.



பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற நூதன பிரச்சாரத்தில், விவசாய அணி அமைப்பாளர் அக்ரி பாலு, அயலக அணி தலைவர் ராஜ்குமார், விவசாயபொறியாளர் அணி தலைவர் கண்ணதாசன், வைரமணி, ஆண்டனி, ஞானவேல், பாலசந்தர், செந்தில்குமார், கிருபாகரன், சுப்பிரமணியன், ரங்கநாதன், அமீன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...