துடியலூர் அருகே அண்ணாமலை பிரச்சாரம் – கிரேன் மூலம் மாலை அணிவித்து இந்து முன்ணணி அமைப்பினர் வரவேற்பு

கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராக்கிபாளையம் பிரிவு பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு பிரச்சாரம் செய்ய வந்த அண்ணாமலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 12 அடி உயரம் உள்ள மிகப்பெரிய பிரமாண்டமான மாலையை கிரேன் மூலம் அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர்.



அங்கு அண்ணாமலை பேசும்போது இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் நாம் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்தில் கிடைத்த எம்பிகளால் எந்த பயனும் ஏற்படவில்லை அனைத்து வசதிகள் இருந்தும் கோவை கடந்த 10 ஆண்டுகளில் எம்பிகளால் எந்த முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.



தமிழகத்தில் ஒரு முக்கிய நகரமாக இந்திய வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் உலக வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் கோவையை மாற்ற பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் மோடி ஆட்சியில் இருக்கும் போது இங்கு உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலை இங்கு இருக்க வேண்டும்.

ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை வாக்கு இயந்திரத்தில் முதல் பட்டனாக உள்ள தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். அதன் பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பார்த்து அரசியலுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவர்கள் கூட தற்போது பாஜக பக்கம் வந்துள்ளனர்.



அடுத்த 15 நாட்கள் தான் கடுமையான வேலை. நீங்கள் ஒவ்வொரு வீடாக சென்று பாஜகவிற்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் உங்களுக்காக நாங்கள் பாடுபடுவது எங்கள் பொறுப்பு என்றார்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...