தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 5, 10 மற்றும் 16ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் (05.04.2024, 10.04.2024, 16.04.2024) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் மக்களவை பொதுத் தேர்தலுக்காக, அனைத்து பில்கள், வவுச்சர்கள், மற்றும் தேர்தல் செலவினத்திற்காக தனி வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேர்தல் செலவினங்கள் தொடர்பான உரிய கணக்குகளுக்கான பதிவேடுகளுடன் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் பின்வரும் நாட்களில் புகைப்பட அடையாளத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...