கோவையில் உலகத்தரம் வாய்ந்த புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

புதிய உலகத் தரம் வாய்ந்த கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (CICS) அமைக்க திட்டம்  முன்வைக்கப்பட்டுள்ளது.  உலகின் மிக நவீனமான, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்திக் கட்டப்படும் ஸ்டேடியமாக இருக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்துள்ளார்.


 கோவை: சென்னையை அடுத்து முக்கிய நகரமாக பார்க்கப்படும் கோவையில் சர்வதேச அளவில் விளையாட்டு வசதிகழ்ந்தெய்து தர வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கிரிக்கெட் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மற்றும் ரசிகர்களுக்கு சிக்ஸர் செய்தியாக வந்துள்ளது அமைச்சர் டிஆர்பி ராஜாவின் அறிவிப்பு. 

புதிய உலகத் தரம் வாய்ந்த கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (CICS) அமைக்க திட்டம்முன்வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா சற்றுமுன்அறிவித்துள்ளார். 

மான்செஸ்டர் ஆஃப் சவுத் இந்தியா, கல்வி மற்றும் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கோவை, தொழில் முனைவோரின்

பிறப்பிடம் என்று கோவைக்கு பல்வேறு அங்கீகாரங்கள் இருந்து வரும் நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் கோவைக்கு வந்து கிரிக்கெட் விளையாடும் ஒரு வாய்ப்பை இந்த நகரம் பெறப்போகிறது. ஏற்கனவே, மூன்று TNPL டீம்களின் உரிமை கோவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மேற்பார்வையில், தமிழகத்தின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி கூடங்களின் உள் கட்டமைப்பு வசதிகள்,முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், கோவையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியம்,உலகின் மிக நவீனமான, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்திக் கட்டப்படும் ஸ்டேடியமாக இருக்கும், என்றார். 

Net-Zero வெளியீடுகளை அடைய முயற்சிக்கும் இந்த திட்டம், உள்ளூர் கிரிக்கெட் சூழலை வலுப்படுத்துவதோடு, பசுமை புதுமைகள், நீர் சேமிப்பு, மற்றும் காலநிலை முன்னோக்கிய சிந்தனையை முன்னுரிமை கொண்டதாக விளங்கும், என்றார். 

கோவையில்முன்மொழியப்பட்ட கிரிக்கெட் மைதானமானது, இப்பகுதியில் உள்ள விளையாட்டு திறமைகளை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல், நிலையான விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு புதிய உலகளாவிய அளவுகோலை நிறுவுவதாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...