கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக் கொலை - செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் வெறிச்செயல்

தனியாக படுத்து உறங்கிக்கொண்டிருந்த வடமாநில தொழிலாளின் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை திருடிய மர்ம நபர் ஒருவர், தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.


கோவை: கோவை கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடை பின்புறம் தனியாருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அதற்காக உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இருந்து 6 தொழிலாளர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 5 பேர் தனியாக ஒரு பகுதியில் தூங்கியுள்ளனர். 23 வயது உடைய ரிங்கு குமார் என்ற இளைஞர் தனியாக படுத்து உறங்கி உள்ளார். அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உறங்கிக் கொண்டு இருந்த ரிங்குக்மாரின் சட்டை பையில் வைத்து இருந்த செல்போனை திருட முயன்றார்.

உடனடியாக விழித்துக் கொண்ட ரிங்குக்குமார் கூச்சலிட்டார். இதைக் கேட்டு அருகில் உறங்கிக் கொண்டு இருந்த ஐந்து பேரும் வருவதற்குள் அந்த மர்ம நபர் தான் வைத்து இருந்த கத்தியால் ரிங்கு குமாரை கழுத்தில் மூன்று முறை குத்தி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடினார்.

உடனடியாக ரிங்குக்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...