தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை அறிக்கையில் கூட எதிர்க்கட்சியினர் பயன்படுத்தவில்லை - தும்மனட்டியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப நலன் கொண்ட சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியை விரட்டுவோம் என்று கூறி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.


நீலகிரி: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், நீலகிரி பாராளுமன்றம், உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்மனட்டி ஊர் மக்களைச் இன்று (ஏப்ரல்.7) சந்தித்து பரப்புரை செய்து, தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வதன் அவசியம் குறித்து விளக்கினார். நடைமுறைக்கு சாத்தியமற்ற பொய் வாக்குறுதிகளை அறிக்கையாக தயாரித்து, கடந்த பத்தாண்டுகளில் நாம் கட்டியமைத்த பொருளாதாரக் கட்டுமானத்தை உடைப்பதையே நோக்கமாக கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை அறிக்கையில் கூட பயன்படுத்தவில்லை.



இப்படி தகுதியற்றவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டியது நமது கடமை. முற்றிலும், ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப நலன் கொண்ட சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியை விரட்டுவோம் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...