பொள்ளாச்சியில் எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை - ரூ.32 கோடி பறிமுதல் என தகவல்

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோர் தமிழக முழுவதும் எம்பிஎஸ் ஹேட் சரீஸ் என்னும் பெயரில் கோழி தீவனம் நிறுவனம் மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தமிழக முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.



பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.



மேலும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நேற்று மாலை துவங்கப்பட்டு இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...