தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குழிப்பட்டி மலைவாழ் மக்கள் அறிவிப்பு – அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்

குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் குழிப்பட்டி, குருமலை, மாவடைப்பு என 15 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. ஐந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் சாலை, குடிநீர், வீடு என அடிப்படை வசதி இல்லாமல் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட பாதிக்கப்படும் மக்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலமும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பல உயிர் இழப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



இந்த நிலையில் பல ஆண்டுகளாக சாலை வசதி மலைவாழ் மக்கள் வேண்டுமென மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தற்போது வரைசாலை வசதி அமைக்கப்படாத நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மலைவாழ் மக்கள் புறக்கணிக்க போவதாகவும், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு யாரும் ஓட்டு கேட்க வர வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...