கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே மே இறுதி வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோயம்புத்தூர்-பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று ஏப்ரல்.10 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கச்சேகுட, சூரத், அகமதாபாத் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06181 கோயம்புத்தூர் - பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 06182 பகத் கி கோதி - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30க்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் காலை 9.30க்கு கோவை வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...