சென்னையில் இருந்து கோவை வழியாக கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு (06043) ரயிலானது முறையே மறுநாள் காலை 8.45க்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு (06043) ரயிலானது முறையே மறுநாள் காலை 8.45க்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து ஏப்ரல் 11, 18, 25ம் தேதிகளில் மாலை 6.25க்கு (06044)புறப்பட்டு, முறையே மறுநாள் காலை 10.40க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயிலில் 14 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...