மக்களிடையே ஒரு நல்ல கனெக்சன் கிடைத்திருக்கிறது - கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

நல்ல ஒரு பிரதமர், நல்ல ஒரு மாநில தலைவர் ஆகியோரால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்க போகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பேரணி கோவையில் நேற்று (ஏப்ரல்.13) நடைபெற்றது.

காந்திபுரம் 100 அடி சாலையில் துவங்கிய இந்த பேரணி சிவானந்தகாலனியில் முடிவடைந்தது. இந்த பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்வானதி சீனிவாசன், கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை ஆகியோர் வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈட்டுபட்டனர். பேரணியின் நிறைவில் மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நிர்மலா சீதாராமன் தலைமையில் மகளிர் மிகப்பெரிய பேரணி மேற்கொண்டுள்ளார். இந்த பேரணிஉற்சாகமானநடந்துள்ளது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், கோவை வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய மகளிர் ஆதரவு பேரணியின் மூலம் தெரிவித்து இருக்கின்றனர். பிரதமர் மோடி முன்னெடுத்திருந்த திட்டங்களால் பலன்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மோடியின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருப்பவர் நிர்மலா சீதாராமன், அவர் வந்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மகளிர் சக்தி தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

இதனையடுத்து மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேரணி மூலமாக மக்களிடம் ஆதரவை கேட்டுக் கொண்டுள்ளோம். நல்ல ஒரு ஊர்வலமாக கோவை நகரத்தில் நடைபெற்றுள்ளது. மோடி ஒவ்வொரு மக்கள் சேவையையும் மக்கள் பெற்று பயன் அடைந்து இருக்கின்றனர்.

நீலகிரி தொகுதியில்பெண்களின் கருத்து கேட்டேன், அவர்களேஎங்களுக்கு பெருவாரியாக திட்டங்கள் கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள் என தெரிவித்தார்.நான் பேச வேண்டிய விஷயங்களை பயனாளிகளே பேசும்போது மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்கள் கீழ் வரை போய் சேர்ந்திருக்கிறது என்பது தெரிந்தது. மோடி திட்டம் மட்டும் போடவில்லை. அதை கடைசி வரை கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் எனவும், திட்டம் மட்டும் இல்லாமல், அங்கு தேவைப்படும் நிதி அனைத்தும் ஒதுக்கி, திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு போய் சேர்க்கின்றதா என்பதை கண்காணிக்கின்றனர் என தெரிவித்தார்.

மாவட்டம் தோறும் பிரதமர் செய்யும் பணிகளை கண்ணால் பார்க்க முடிகிறது என தெரிவித்த அவர், மக்களிடையே ஒரு நல்ல கனெக்சன் கிடைத்திருக்கிறது எனவும், நல்ல ஒரு பிரதமர், நல்ல ஒரு மாநில தலைவர் ஆகியோரால் மக்களவைத் தேர்தலில் வெற்றி கிடைக்க போகிறது என தெரிவித்தார். மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும், அண்ணாமலை மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...