கோவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி எம்.கே அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கோவை பாராளுமன்ற தொகுதியில் 100% ஓட்டுப்பதிவு நிகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் உள்ள பிரபல தொழில் குழுமமான எம்.எம்.கே குழுமத்தின் கீழ் செயல்படும் எம்.கே அறக்கட்டளை சார்பில் 'வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி' இன்று (14.04.2024) நடைபெற்றது.



இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் செல்வசுரபி கலந்து கொண்டு எம்.கே குழுமத்தின் தலைவர் M.V. மணிகண்டன் முன்னிலையில் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பேரணியில் 250 வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுடன் பங்கேற்றவர்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, அவிநாசி சாலையில் அமைந்துள்ள LIC அலுவலகம் வழியே சென்று, Huzur ரோடு, ரேஸ் கோர்ஸ் வரை சென்று அங்கிருந்து மீண்டும் அதே வழியில் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு திரும்பினர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்வு குறித்து எம்.கே. குழுமத்தின் தலைவர் மணிகண்டன் கூறியதாவது, கோவையில் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 70 சதவீகிதம், அல்லது 75 சதவிகித வாக்கு பதிவு மட்டுமே பதிவாகின்றது. மீதமுள்ள 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் பேர் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் உதவிபுரிய மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து வாகன வசதிகளை இந்த ஆண்டு நமது அறக்கட்டளை சார்பாக ஏற்படுத்தி உள்ளதாகவும், ஆயினும் வாக்குகளிப்பதன் அவசியத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியாக கூறினார். முன்னதாக அனைவரும் வாக்களிப்போம் என மனித சங்கிலியாக நின்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...