ஈஷாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு - பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு

சூர்யகுண்டம் மண்டபம் முன்பு நடைபெற்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் நாட்டுபுற இசை, நடனம் மற்றும் களரிபயட்டு கலை நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.


கோவை: ஈஷாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர்.



மேலும் ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள் தேவி திருமேனியுடன் கூடிய ரதத்துடன் லிங்க பைரவி கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். நம் பாரத தேசத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக அந்தந்த மாநிலங்களில் புத்தாண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் அதே வேளையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மஹாராஷ்ட்ரா, காஷ்மீர், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் இப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஈஷாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுக் கூடி தமிழ் புத்தாண்டை கோலாகலாமாக கொண்டாடினர்.

மேலும் சூர்யகுண்டம் மண்டபம் முன்பு நடைபெற்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் நாட்டுபுற இசை, நடனம் மற்றும் களரிபயட்டு கலை நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.



ஈஷாவை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தேவி திருமேனியுடன் கூடிய ரதத்துடன் மலைவாசலில் இருந்து லிங்க பைரவி கோவில் வரை ஊர்வலம் வந்தனர். மேலும் அவர்கள் பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணம் செய்து வழிபட்டனர்.



பின்னர் லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டு தினத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் ஆதியோகியை காண பெருந்திரளாக திரண்டிருந்தனர்.



அத்துடன் ஆதியோகி திவ்ய தரிசனம் என்ற ஒலி ஒளிக் காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...