4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் – சிங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில், இந்தியா கூட்டணியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இன்று (ஏப்ரல்.17) பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் மகளிர் இலவச பேருந்து திட்டம் மூலம் 27 கோடி பயணங்களை இம்மாவட்ட மகளிர் மேற்கொண்டு உள்ளனர் என்றார். இதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.900 வரை சேமித்து உள்ளனர் என்றார். புதுமை பெண் திட்டம் மூலம், கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரி கல்வி பயிலும் 14,000 மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 பெறுகின்றனர். 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தினமும் 80,000 மாணவ மாணவிகள் சத்தான உணவை உண்ணுகின்றனர் என்றார்.



மேலும் அவர் கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.



கோவை தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் உதய சூரியன் சின்னம் களத்தில் இறங்கியுள்ளது. எனவே குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் என கோவை மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...