தமிழ்நாட்டின் விடியல் கோவையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் - à®…மைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவை சிவானந்தா காலனியில், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தில்  ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும்.பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.



கோவை: à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯ முழுவதும் கடந்த 22 நாட்களாக பிரசாரம் செய்கிறேன். கோவையில் இன்று (நேற்று) மட்டும் 5 இடங்களில் பிரசார கூட்டத்தில் பேசி உள்ளேன். கோவை மக்கள்தான் ஒன்றிய பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத போகிறீர்கள். அதனால் தான் கடைசியாக கோவை வந்துள்ளேன், என்று கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், 



தலைவரின் அன்பையும், கோவை மக்களின் ஆசியும் பெற்ற வேட்பாளர் தான் கணபதி ராஜ்குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் உதய சூரியன் சின்னத்தில் நேரடியாக போட்டி போடுகிறோம். கடந்த முறை கூட்டணி வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 1.80 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே, இந்த முறை நீங்கள் குறைந்தது 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். நாம் இந்த தேர்தலில் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கின்ற வேட்டு. 

3 à®†à®£à¯à®Ÿà¯à®•ளில் திமுக அரசு கோவைக்கு செய்துள்ள திட்டங்கள். 

கோவை மாவட்டத்தில் ஆழியார் நீரேற்று திட்டத்தை 2500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்து கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வர உள்ளோம். மெட்ரோ ரயில் பணிக்காக 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. கோவை செம்மொழி பூங்கா அமைப்பதற்காக ரூ. 200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையை போல கோவையிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வர உள்ளது. பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் பவானி நதியினை நீராதாரமாக கொண்டு 800 கோடி மதிப்பில் முடிக்கப்பட உள்ளது.

மருதமலை கோயில் பணிகள் 40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில், குறிச்சியில் 38 கோடி மதிப்பீட்டில் சிப்காட் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. எல்காட் சார்பில் மிகப்பெரிய தகவல் பூங்கா 1100 கோடி மதிப்பீட்டில் அமைக்கபட உள்ளது. சோமையம்பாளையத்தில் 320 ஏக்கரில் புதிய டெக்ஸ் சிட்டி அமைய உள்ளது. 



கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. நேரு விளையாட்டரங்கில் 65 லட்சத்தில் புதிய டிராக் அமைக்கப்பட்டுள்ளது. கோவை சாலைகள் 300 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் 8200 விவசாயிகள் கட்டணமில்லா மின் சேவையை பெற்று வருகின்றனர். இவையெல்லாம் இந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கோவைக்கு செய்துள்ள திட்டங்கள். 

வருங்கால திட்டங்கள் 

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப் போவது உறுதி. ஆட்சி அமைந்தால் சிலிண்டர் விலை ரூ. 500, பெட்ரோல் ரூ. 75, டீசல் 65க்கு கொடுக்கபடும். அவிநாசி, உக்கடம் மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கோவையில் பல வருட கோரிக்கையான சர்வதேச கிரிக்கெட் மைதானம் பணிகள் துவங்கப்படும். பாதாள சாக்கடை மறு சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் புதிய ஸ்டார்ட் அப் ஹப் கொண்டு வரப்படும். நகைத்தொழில் புத்துயிர் பெற புதிய சிட்கோ பூங்கா கொண்டு வரப்படும். இந்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 

திமுக வாக்குறுதிகள் நிறைவேற்றம் 



கொரோனா காலத்தில், முடங்கிய மக்களுக்கு ஒன்றிய அரசு இழப்பீட்டு வழங்கவில்லை. ஆனால், à®’வ்வொரு குடும்பத்துக்கும் திமுக நிவாரண தொகை கொடுத்தது. 

நமது ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், இந்தியாவே மெச்சும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 27 கோடி முறை கட்டணமில்லா பேருந்தில் மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

பெண்கள் விடுதலைக்காக போராடியவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்தவர்கள் தான் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர். 1989ம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என கொண்டு வந்தவர் கலைஞர். அதன் வழியே தான் நமது தலைவரும் செயல்பட்டு வருகிறார்.



பாதம் தாங்கி பழனிசாமி எப்படி முதல்வர் ஆனார் என உங்கள் எல்லோருக்கும் தெரியும். தேர்தலுக்காக நாடகம் ஆடும் பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை. ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் தமிழ்நாட்டிற்கு 29 பைசாவும், அவர்கள் ஆளும் உத்தரபிரதேசத்துக்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் கொடுக்கின்றார். ஜிஎஸ்டி என்பது வரி அல்ல, அது வழிப்பறி.

பிரதமரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நமக்கு வந்து விட்டது. பாஜக-வை ஒழிக்கின்ற வரை, தமிழ்நாட்டில் இருந்து துரத்தும் வரை திமுககாரன் மட்டுமில்ல, கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம். தமிழ்நாட்டுக்கு நல்லது பிறக்க வேண்டுமானால் இது நிச்சயம் நடக்கும். 2010ம் ஆண்டு நீட் தேர்வு இந்தியா முழுக்க வந்தது. அப்போது  முதல்வராக இருந்த கலைஞர், நீட் தேர்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை. 

கவுன்சிலிங் முறையில் சீட் தருகிறேன் என ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கியவர் கலைஞர். ஆனால் ஜெயலலிதா இருந்த வரையும் நீட் வரவில்லை. அவர் இறந்த பிறகு 2016ம் ஆண்டுக்கு பிறகு அடிமைக் கூட்டம் நீட் தேர்வை கொண்டு வந்தது. இதனால் ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறாமல் நீட் தேர்வால் 22 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் பேசிய ராகுல்காந்தி இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், எந்த மாநிலத்துக்கு நீட் தேர்வு தேவையோ அனுமதிக்கிறோம். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லையென்றால், நீட் விலக்கு அளிப்போம் என்ற வாக்குறுதியை அளித்துள்ளார். 

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஒன்றிய அரசும், பழனிசாமியும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டி விட்டு சென்றனர். ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்றும் கூறி விட்டனர். ஆனால் 2 ஆண்டு முன்னாடி நான் அங்கு சென்ற போது மதில் சுவர் எழுப்பி இருந்தனர். நான் மருத்துவமனை கட்டிவிட்டார்கள் என நினைத்து அங்கு சென்ற போது, நடிகர் வடிவேலு பாணியில் கிணற்றை காணோம் என்பது போல மருத்துவமனையை காணவில்லை. 

அவர்கள் வைத்துவிட்டு சென்ற ஒற்றை செங்கல் தான் இருந்தது. இந்த கல்லை காணோம் என தேடி வருகின்றனர். மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை இந்த கல்லை தரமாட்டேன் என கூறிவிட்டேன். இது தான் 29 பைசா மோடியும், பழனிசாமியும் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை. 

ஆனால், பாஜக ஆளும் 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நமது தேர்தல் வாக்குறுதியில் ஒரு ஆண்டில் 360 கோடி மதிப்பீட்டில் சென்னையில் 1000 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 10 மாதத்தில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றி உள்ளோம். 

இதுதான் 29 பைசா மோடிக்கும், நமது திராவிட மாடல் அரசுக்கும் உள்ள வித்யாசம். எனவே, 29 பைசா மோடிக்கு மானமிகு சுயமரியாதைக்காரர்கள் என நாம் நிரூபிக்க வேண்டும். நம்மை மதிக்காத இரக்கமற்ற சர்வாதிகாரி தான் இந்த மோடி. 

நமது மாநில உரிமைகளை மீட்க அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கணபதி ராஜ்குமாரை 3 லட்சம் வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 

தமிழ்நாட்டின் விடியல் கோவையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். வெற்றி விழாவுக்கு கோவை வருவேன். பிரியாணி ரெடியாக வைத்து கொள்ளுங்கள். 

வருகிற ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாள். அதற்கு அடுத்த நாள் தேர்தல் முடிவில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி அந்த வெற்றியை கலைஞரின் பாதத்தில் வெற்றியை காணிக்கை ஆக்குவோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...