உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 2-வது நிகழ்வாக 16-ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் அடையாளமாக கருதப்படும் கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.



முன்னதாக கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் கொடியேற்றம் பகுதியில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...