கோவையில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு

பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பங்கஜம்(73). இவர் நேற்று ஏப்ரல்.22 மணீஸ் தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டார்.

பின்னர் ஆர்கே மில் நிறுத்தத்தில் இறங்கிய போது மூதாட்டி தனது கழுத்தில் இருந்த செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...