போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன்

குண்டம் திருவிழாவிற்காக கோயில் வளாகத்தில் நேற்று இரவு அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டது. இதில், விரதம் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று காலையில் பத்ரகாளியம்மன் தாயே போற்றி என குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்று வட்டார 18 பட்டி கிராம மக்களும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 8 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில், அவிநாசி கொடுமுடி திரௌபதி அம்மன், தர்மராஜா ஆலயங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கொலு வைத்து கொடிமரம் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தும் குண்டம் திருவிழாவிற்காக கோயில் வளாகத்தில் நேற்று இரவு அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பூ குண்டம் அருகே வான வேடிக்கையுடன் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை விரதம் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்ரகாளியம்மன் தாயே போற்றி என குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவை காண சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனை தரிசித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...