கோவையில் பணியாற்றும் பிற மாநிலத்தவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஊதியத்துடன் விடுப்பு - தொழிலாளர் துறை வேண்டுகோள்

கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பிற மாநிலங்களில் வாக்குரிமை உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று வாக்களிக்க எதுவாக தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்தியா முழுவதும் நாடாளுமன்ற பொது தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் இம்மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதே போல் இரண்டாவது கட்டமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வரும் 26 ஆம் தேதி, மே மாதம் 7ம் தேதி மற்றும் மே 3ஆம் தேதி ஆகிய நாட்களில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது.

இதில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் தொழிலாளர் துறை தரப்பில் ஒரு முக்கிய அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT/BPO) உள்ளிட்ட அனைத்து பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பிற மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று வாக்களிக்க எதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன் பிரிவு 135/பி-ன் கீழ் அந்தந்த தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை உறுதி செய்ய கீழ்க்கண்ட அலுவலர்களைக் கொண்டு தொழிலாளர் துறையால் ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை தொடர்பான புகார்கள் இருந்தால் அதை கோவை மாவட்ட பொறுப்பு அலுவலர் / தொழிலாளர் உதவி ஆணையரை 9445398752/ 0422-2241136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...