வீட்டு மனைபட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாத்திர பண்டங்களுடன் குடியேறும் போராட்டம்


கூடலூர், கவுண்டம்பாளையம் பேரூராட்சி தெக்குபாளையம் பகுதி பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமில் பாத்திர பண்டங்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, 22 குடும்பங்கள் இங்கு வசித்து வரும் ஓடை புறம்போக்கு 30 வருடங்களுக்கு முன்பு வகையறா மாற்றம் செய்யபட்டு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாக கூறினர். மேலும் அருகாமையில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் தாங்கள் வசித்து வரும் இடத்தை ஆக்கரமித்து விளையாட்டு மைதானம் பூங்கா ஆகியவை அமைக்க முற்பட்டதை தொடர்ந்து பேரூராட்சி தலைவரிடம் முறையிட்டதை தொடர்ந்து வீட்டுமனை பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என தீர்மானம் நிறைவேற்றபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், அங்கு குடிநீர் தெரு விளக்குகள் என வசதிகள் செய்து கொடுக்கபட்டதாக தெரிவித்தவர்கள் தற்போது அரசு அறிவிப்பின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்துவதின் பெயரில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் விவசாய நிலமாக இருந்த போது பயன்பாட்டில் இருந்த ஓடை தற்போது குடியிருப்பாக மாறியதை தொடர்ந்து வெள்ளம் வருவதற்கான வாய்ப்பு இல்லை என கூறி தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பாத்திர பண்டங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ஷீட்களை தரையில் விரித்துபடுத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...