பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் கூலிங் பெயிண்ட் - பக்தர்கள் மகிழ்ச்சி

பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக நடந்து செல்லும் போது பாதங்கள் சுடுவதில்லை என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

புகழ்பெற்ற இந்த கோவிலின் உள்பிரகாரம் கருங்கற்களால் ஆனது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கருங்கற்களால் ஆன பிரகாரத்தை சுற்றி வர முடியாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பலர் கால்கள் சுடுவதால் பிரகாரத்தை சுற்றி வருவதை தவிர்த்து வந்தனர்.



இந்த நிலையில் அண்மையில் தனியார் உபயதாரர் மூலம் பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக பக்தர்கள் நடந்து செல்லும் போது அவர்களின் பாதங்கள் சுடுவதில்லை. இதனால் பக்தர்கள் மன நிம்மதியுடன் பிரகாரத்தை தற்போது வலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர் என கோவிலில் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...