உடுமலை கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி தற்கொலை - இரண்டு பேர் மீது வழக்கு

கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் கலைந்துசென்றனர்.


திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா பனைமரத்து பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கருப்புசாமி (வயது 38). முதுகலை புள்ளியியல் பட்டதாரியான இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி கருப்புசாமி விஷம் குடித்து விட்டு மொட்டை மாடியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மொட்டை மாடிக்கு சென்ற அவரது தாயார் கருப்புசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி கருப்புசாமி இறந்து விட்டார்.

இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கருப்புசாமி தனது இறப்புக்கு காரணம் கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகியோர்தான் காரணம் என்று மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தது தெரியவந்தது. அந்த கடிதத்துடன் உடுமலைக்கு வருகை தந்த அவரது உறவினர்கள் கடந்த 24ம்தேதி உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணனிடம் மனு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கடிதம் அளித்தார். அதன் பேரில் போலீஸ் விசாரணை முடிக்கி விடப்பட்டது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பில் சார்பில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று கண்டன போராட்டமும், உடுமலை தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் காலஞ்சென்ற கருப்புசாமியின் சகோதரர் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பேரில் கணக்கம்பாளையம் கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகியோர் மீது கருப்புசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக சட்டப்பிரிவு (306) மாறுதல் செய்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். அதைத் தொடர்ந்து கிராம உதவியாளர் சித்ரா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் தெரிவித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...