உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி கிராம உதவியாளர் சித்ரா அதிரடியாக சஸ்பெண்ட்

கிராம நிர்வாக அலுவலர் தற்கொலைக்கு நீதிகேட்கும் போராட்டம் வலுத்ததையடுத்து உடுமலை வட்டாட்சியர், கணக்கம்பாளையம் ஊராட்சி கிராம உதவியாளராக பணியாற்றி வந்த சித்ராவை சஸ்பெண்ட் செய்தார். அவரது வீட்டின் முன்பு சஸ்பெண்ட் உத்தரவு நகல் ஒட்டப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் கருப்புசாமி கடந்த 23ஆம் தேதி கூலநாயக்கன் பெட்டியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் காவல்துறையினர் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.



இந்த நிலையில் 24-ஆம் தேதி கருப்புசாமி தன் கைப்பட எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தை உறவினர்கள் இளவரசன் கோகுல் சந்துரு ஆகியோர் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் வாங்கினர்.

கருப்புசாமியின் மரண வாக்குமூலம் கடிதம் கிடைத்த நிலையில் கோமங்கலம் காவல்துறையினர் தற்கொலை வழக்கை மாற்றி தற்கொலைக்கு தூண்டுதல் என மாற்றி பதிவு செய்தனர். இந்த நிலையில் மரண வாக்கு மூலத்தில் கருப்புசாமி தன் சாவுக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்த கிராம உதவியாளர் சித்ரா, மக்கள் மித்ரன் மணியன் தான் காரணம் என எழுதி இருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்புச்சாமியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்சமயம் உடுமலை வட்டாட்சியர் கணக்கம்பாளையம் ஊராட்சி கிராம உதவியாளராக பணியாற்றி வந்த சித்ராவை சஸ்பெண்ட் செய்து அவரது வீட்டின் முன்பு சஸ்பெண்ட் உத்தரவு நகல் ஒட்டப்பட்டது. மேலும் கோமங்கலம் காவல் துறையினர் கருப்புசாமியை தற்கொலைக்கு தூண்டிய இருவரை தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...