கோவை ராமநாதபுரத்தில் இன்ஜினியரின் வீட்டில் 41 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களை அழைத்து சென்று சோதனை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


Coimbatore: கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சிவராம் நகரை சேர்ந்தவர் மன்மதன்(55). திருச்சியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுராதா(52). இந்நிலையில், கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனுராதா திருச்சி சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக டார்ஜிலிங் சென்றனர். 

இதனையடுத்து, நேற்று முன்தினம் அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த வீட்டு வேலைக்கார பெண் சுசீலா என்பவர் செல்போனில் அனுராதாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். இதனையடுத்து அனுராதா கோவையில் உள்ள தனது சகோதரரை வீட்டுக்கு சென்று பார்க்கும் படி கூறினார். மேலும் நேற்று (ஏப்ரல்.27) அனுராதா கோவை திரும்பினார். 



வீட்டுக்கு சென்று பார்த்த போது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 41 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அனுராதா ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதில், கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...