சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு குளிர்சாதன ரயில் சேவை

சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு குளிர்சாதன ரயில் சேவை தொடக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை மார்க்கத்தில் நிற்கும் இந்த சேவை மே 29ம் தேதி முடிவடையும்.


கோவை: சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு குளிர்சாதன ரயில் ஒன்று புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கேரளாவின் கொச்சுவேலி ரயில்நிலையத்திற்கு சென்றடைகிறது. இரயில் எண் 06043 என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 29ம் தேதியன்று இந்த சிறப்பு ரயில் தனது கடைசி சேவையை நிறைவு செய்கிறது.

மறு மார்க்கத்தில், கொச்சுவேலியில் இருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமைகளில் மாலை 6.25 மணிக்கு ரயில் எண் 06044 புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறது. மே 30ம் தேதியன்று இந்த ரயிலின் கடைசி சேவை அமைகிறது.

இத்துடன், 14 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...