ஊட்டியில் புதிய வரலாற்றை தொட்ட வெப்பம் - 84.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஊட்டிக்கு இன்பச்சுற்றுலா செல்லும் நிலையில் தற்போது, ஊட்டியிலேயே வெப்பம் அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று (ஏப்ரல்.28) ஊட்டியில் இதுவரை இல்லாத அளவில் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் (29 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஊட்டியில் கடந்த 1986ம் ஆண்டு 83 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் இதுவே ஊட்டியில் பதிவான அதிகபட்ச வெப்பம் என்று இருந்த நிலையில், நேற்று ஊட்டி புதிய வரலாற்றை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...