குனியமுத்தூரில் ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா திருட்டு

ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் கோஷல் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட்சன்(29). இவர் குனியமுத்தூர் பி.கே.புதூரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி ரிச்சர்ட்சன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் விடுமுறை என்பதால் கடைக்கு செல்லவில்லை.



இந்நிலையில், நேற்று ஏப்ரல்.29 காலை ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை சிலர் பார்த்து ரிச்சர்ட்சனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே விரைந்து வந்து பார்த்தார்.அப்போது உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து அங்கு பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...