பொள்ளாச்சியில் திமுக சார்பில் மே தின ஊர்வலம் - ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கோவை சாலை, புதிய திட்ட சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேர்நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.



பின்னர் உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வர சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...