கோவையில் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: காவல்துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்

எஸ்.என்.எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புடன் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தினர்.



இன்று காலை கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த பேரணி பந்தயசாலை காவல் நிலையத்தில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தை அடைந்தது.



முன்னதாக மாணவர்களிடம் துணை ஆணையர் சரவணன் பேசுகையில், ‘கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் 34 மாணவர்கள் உயிரிழந்தனர். 

போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததாலே இந்த விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்க இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாணவர்களே விழிப்புணர்வு பேரணியை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

இந்த பேரணியில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார்,  காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...