கோவையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்

விவாதிப்பு கூட்டத்தில் குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரிநாராயணன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று (மே.3) நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள்-3, உதவி ஆய்வாளர்கள்-09, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-2, தலைமை காவலர்கள்-13, முதல் நிலைக் காவலர்கள்-6, காவலர்கள்-13 என மொத்தம்-46 நபர்களை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.



Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...