20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம் - கோவையில் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் பேட்டி

20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான் என்றும், கண்டிப்பாக நடராஜன் இருந்திருக்க வேண்டும் என்றும், அவரது யாக்கரை அடித்து கொள்ள ஆள் இல்லை என்றும் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் வளாகத்தில் கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. சுமார் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர் அடுத்த 30 நாட்கள் நடைபெற உள்ளது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டி தொடரின் இறுதி போட்டிகள் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து போட்டிகளும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.



முன்னதாக நேற்று இரவு நடைபெற்ற துவக்க விழாவில் போட்டி தொடரின் ஒருங்கிணைப்பாளர்களான லீமா ரோஸ் மார்ட்டின், வின்னர்ஸ் இந்தியா கண்ணன், லிஜோ சுங்கத் உள்ளிட்ட பலர் பங்கேற்று வீரர்களுக்கு உற்சாகமூட்டினர். முன்னதாக விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன், சிபிஎல் கோவை போட்டி தொடர் சிறப்பாக துவங்கி உள்ளதாகவும், எந்த அளவுக்கு இந்த போட்டிகள் சிறப்பாக நடைபெறுகிறதோ இந்திய கிரிக்கெட்டிற்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.



இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை ஆண்களுக்கு நிகரான முக்கியத்துவம் பெண்களுக்கும் அளிக்கப்பட்டு வருவதாகவும், இப்போது மகளிர் கிரிக்கெட் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், நல்ல ஒரு முன்னேற்றத்தை கண்டுவருவதாகவும் குறிப்பிட்டார். தமிழக பெண் வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஊக்கமளித்து வருவதாகவும், விரைவில் தமிழகத்தை சேர்ந்த மூன்று நான்கு பெண்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான் என்றும், கண்டிப்பாக நடராஜன் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறிய அவர், இந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பெறா விட்டாலும் அவர் விரைவில் பெரிய அளவில் எழுச்சி பெறுவார் என்றும் அவரது யாக்கரை அடித்து கொள்ள ஆள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...