பில்லூர் அணை முழுமையாக தூர்வாரப்படும் - கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவிப்பு

கோவை மாநகரின் குடிநீர் தேவைக்காக முக்கியம் வகிக்கும் பில்லூர் அணை, கடந்த 55 ஆண்டுகள் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. தீர்வுக்காக பணிகள் எடுக்கப்படப்போகிறது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உறுதியளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தின் முக்கிய நீர்வள ஆதாரமாக உள்ள பில்லூர் அணை, கடந்த 55 ஆண்டுகளாக ஒருமுறையும் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. கோவை நகரத்தின் குடிநீர் அவசரகால நிலைமைக்காக, இந்த அணை முக்கியமான பங்கு வகிக்கிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் 1966ல் கட்டப்பட்ட இந்த அணை, அதன் கொள்ளளவு கொண்ட 100 அடி உயரத்தில், 70% வரை வண்டல் மண் ஏற்கனவே குவிந்துள்ளதால், தூர்வாரப்படாமையால் குடிநீர் ஆதாரம் சுருங்கக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பில்லூர் அணை தூர்வாருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில், இந்த அணை முழுமையாக தூர்வாரப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உறுதியளித்தார். உலக வங்கி வல்லுநர்களின் கருத்துரையை பெற்று, எதிர்வரும் நாட்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...