மதிமுக பற்றி பேச முன்னாள் அவை தலைவர் துரைசாமிக்கு அருகதை இல்லை - கோவையில் ஆடிட்டர் அர்ஜுனராஜ் பேட்டி

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அவைத் தலைவர் துரைசாமிக்கு மதிமுக பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றும், தலைமை பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் பேசிவதாவும் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: ம.தி.மு.க கட்சி துவங்கபட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 31-வது ஆண்டு துவக்கவிழா கொண்டாடபட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலையில் கட்சி கொடியேற்றபட்டது.

இதனை தொடர்ந்து ம.தி.மு.க. அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்பொழுது அவர் கூறியதாவது, தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தது. அவற்றில் பல காணாமல் போனது. ஆனால் ம.தி.மு.க. 31 ஆண்டுகளாக வீறுநடை போட்டு வருகிறது. எங்களது தலைவர் பணம், பதவி, ஆசை என அனைத்தையும் துறந்தவர் வைகோ. அவர் காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட குரல் கொடுத்தார்.

ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று அரசு கூறியது. மகாத்மா காந்திக்கு எவ்வாறு இடம் கிடைத்ததோ அதே இடத்தில் காமராஜருக்கும் சிலை அமைத்து தாருங்கள் என கேட்டு பெற்றவர் வைகோ. தமிழினம் வாழ வைகோ பாடுபடுகிறார். அவரது பின்னால் நாங்கள் நிற்கின்றோம் என்றார்.

மேலும் முன்னாள் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வைகோ அணி‌மாறிவிட்டதாக கூறியுள்ளார். எல்லா கட்சிகளும் ஒரே நிலைபாட்டில் இருப்பது இல்லை. எங்கள் கொள்கையில் சமரசம் செய்தது இல்லை. தமிழ் இனத்துக்காக எப்போதும் பாடுபடுவோம். கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் எங்களுக்கு கிடைத்த தீப்பெட்டி சின்னம் கிடைத்ததால் அதில் போட்டியிட்டோம். துரைசாமிக்கு எங்களை பற்றி பேச அருகதை இல்லை.

மதிமுக பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. தலைமை பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார். ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவர் கட்சி பற்றி எந்த கருத்தும் பேசக்கூடாது. மதம், இனம் ரீதியாக மக்களை பிரிவினையை உண்டாக்கும் பா.ஜனதா ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ அதிக‌வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.



இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு, உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர். மோகன் குமார், சட்டதுறை செயளாளர் சூரி நந்தகோபால், மாவட்ட அவை தலைவர் ஆ.சேதுபதி, மாவட்ட துணை செயலாளர்கள் பயனீர் தியாகு, தூயமணி, மதிமுக கவுன்சிலர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, சித்ரா தங்கவேலு, அன்பு என்கிற தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...