தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் - மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவில் விழாவிற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி 19 பேர் காயமடைந்தனர். மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரை அடுத்த துலுக்கவலசு அருகே கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.



மூலனூர் அருகே உள்ள பட்டுத்துறை என்ற இடத்தில் மலையாள கருப்பண்ணசாமி கோவில் விசேஷத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டாட்டா ஏஸ் வாகனத்தில் கோவிலுக்கு வந்து கொண்டிருந்த வழியில் எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் (56), ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சத்யா (14), அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (35,) நாகரத்தினம் மார்க்கம்பட்டி, மாரியம்மாள் (36), செல்வபிரியா (13), ஈஸ்வரி வயது 39, மற்றொரு ஈஸ்வரி வயது 30, பொட்டியம்மாள் (55) இறந்தவர், லட்சுமி வயது 47, சுப்பிரமணி 60, பழனியம்மாள் (70) ஆகியோர் காயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 12-நபர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், மீதமுள்ள 8- நபர்களை வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மூலனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...