இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியபடி கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இஸ்ரேல் பாலஸ்தீன போரில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் உள்ள மாணவர்கள் போராடி வருகின்றனர்.



குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் போராடக்கூடிய மாணவர்கள் மீது அமெரிக்க காவல்துறை கொடூரமாக தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இந்த போராட்டத்தில் போராடக்கூடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும், உடனடியாக இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து மாநில முழுவதும் SFI அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இஸ்ரேல் பாலத்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...