மாங்கரை ஓடைப் பகுதியில் யானை உயிரிழப்பு - காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு

மருத்துவக் குழுவினர் நடத்திய ஆய்வில் நுரையீரல் பாதிப்பால் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நுரையீரல் பாதிப்பால், மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்து யானை உயிரிழந்துள்ளது.


கோவை: கோவை வனத்துறையினர் நேற்று மே.7 காலை மாங்கரை பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் அருகே உள்ள மாங்கரை சரக வனப்பகுதியில் வனத்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வனப்பகுதிக்கு வெளியே வனப்பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள வனத்திற்குள் இருந்து வருகின்ற மாங்கரை ஓடை பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். பின்னர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் திருமுகன் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த யானையின் உடலை மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அதில், யானை நுரையீரல் நோயால் பாதிப்படைந்தது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "உயிரிழந்த யானையின் உடலை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

யானையின் நுரையீரல் பாதிப்பால், அதன் மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்ததில் யானை உயிரிழந்துள்ளது. மேலும், யானையின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிற்கு பிறகு தான் யானையின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெரியவரும் என வனத்துறையினர் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...