கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்ற தேனி போலீசார்

கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.


கோவை: யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனி போலீசார் நேற்று (07-05-2024) அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று (08-05-2024) காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.

ஏற்கனவே அவர் தேனியில் இருந்து கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வந்தபோது திருப்பூர் அருக விபத்தில் சிக்கினார். எனவே இந்த முறை விபத்தில் வேன் சிக்காத வகையில் பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு போலீஸ் வாகனம் சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...