சத்தியமங்கலம் காட்டு பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி – தாராபுரத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் புகார்

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம் அடைந்துள்ளது எனவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: சத்தியமங்கலத்தில் காட்டு பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் குற்றம் சாட்டினர். தாராபுரம் பகுதிக்கு வருகை தந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம் அடைந்துள்ளது.கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

காவல்துறையினர் மெத்தனப்போக்கே இதற்கு காரணம். தமிழக கல்லூரிகளில் குச்சி மிட்டாய், சாக்லேட் என நூறு வடிவங்களில் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை ஆகிறது. கல்லூரி மாணவிகளுக்கு இந்த போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது வருந்ததக்கது. உளவுப் பிரிவு போலீசார் மற்றும் லோக்கல் போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளனர்.



சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்வருடன் போதைப் பொருள் விற்பனை மன்னன் ஜாபர் சாதிக் சர்வசாதாரணமாக போட்டோக்கு போஸ் கொடுத்ததும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்ததை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியில் ஒரு 40-ஏக்கர் நிலத்தில் சுமார் 50-ஆண்டுகளாக குத்தகைக்கு இருந்த குப்புசாமி கவுண்டர் குடும்பத்தினர் திருப்பூர் சென்றிந்த போது ஆளுங்கட்சியை சேர்ந்த கும்பல் அத்துமீறி நுழைந்து பைப்புகளை உடைத்தும், வீட்டை சேதப்படுத்தியும் உள்ளனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

உடனடியாக விசாரணை செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் விரைவில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...