கோவை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு, சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு, சிங்கப்பூரிலிருந்து விமானம் தரையிறங்கியது. அவர்கள் விமானத்தில் வந்த இந்திய பயணி ஒருவரிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையின் போது, அவரிடமிருந்து பத்து தங்க கட்டிகள் மற்றும் இரண்டு செயின்கள் சேர்ந்து மொத்தம் 1,220 கிராம் தங்கத்தின் மூலம் ரூ.90,28,000 பெருமதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நபர் எவ்வாறு இந்த தங்கத்தை கடத்த முயன்றார் என்பது பற்றிய விசாரணை நிலுவையில் உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...