ஆனைமலை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை - ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்

கடும் வறட்சியிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வாழை மரங்களை காப்பாற்றிவந்தநிலையில், நேற்றிரவு காற்றுடன் பெய்த மழையில், ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.



இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 100க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது.



கடந்த ஆறு மாத காலமாக கடும் வரட்சி நிலவி வந்த சூழலில், பல லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் விலைக்கு வங்கி பயிரிட்ட வாழை மரங்களை காப்பாற்றிய விவசாயிகள், நேற்று நள்ளிரவு வீசிய சூறை காற்றால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சுமார் 75லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...