ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாட்டம்

சர்வதேச செவிலியர் தின விழாவை முன்னிட்டு, செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து சேவையாற்றிய செவிலியர்களுக்கு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். G.மனோகரன் சாதனையாளர் விருது வழங்கினார்.


கோவை: மருத்துவ துறையின் முதுகெலும்பாக, அன்றாடும் தங்களது உழைப்பை ஈடுஇணையற்ற சேவையாக வழங்கி வரும் செவிலியர்களை பாராட்டி கௌரவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்த வருடம், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், சர்வதேச செவிலியர் தின விழா, மே 11 ஆம் தேதியான இன்று சிறப்பாக கொண்டப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து பணியாற்றி சேவையாற்றிய செவிலியர்களுக்கு, சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். G.மனோகரன் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்த ஆண்டின் செவிலியர் தின, ஆய்வுப்பொருளான, 'எங்கள் "செவிலியர்கள் எங்கள் எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி" என்பது பற்றி பேசிய டாக்டர் G.மனோகரன், மருத்துவத்துறையின் எதிர்காலம் செவிலியர்களை சிறப்பாக பயன்படுத்துவதில் தான் உள்ளது என்று குறிப்பிட்டார்.



இந்த ஆண்டின் விழாவையொட்டி, முன்னதாகவே, செவிலியர்கள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவமனையின் மருத்துவர்கள், நிர்வாகிகள் என அனைவரும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஊக்குவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...