கோவை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி வரை இடியுடன் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழையும், 16 மற்றும் 17ம் தேதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டியெடுத்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி இருக்கும், மழை அளவு எப்படி இருக்கும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக் தற்போது மே.11 கூறியுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16,17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதேபோல சென்னையில், 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 16,17 தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தது 29 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில், 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 13,14 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. 16,17 தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தது 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...