கோவையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இடிஐ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII - TN) இடிஐ இந்தியா (EDI) நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான (P.G Diploma in Entrepreneurship and Innovation) பாடத் திட்டம், முக்கியத்துவம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் நாளை (15.05.2024) மாலை 4 மணி அளவில், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் சி.உமாசங்கர் தலைமையில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக தமிழ்நாடு அரசு இடிஐஐ நிறுவனம், அகமதாபாத் நகரில் இயங்கிவரும் பெயர்பெற்ற இடிஐ இந்தியா(EDI) நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்பு வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் படிப்பை சென்னை இ.டி.ஐ.ஐ தலைமையகத்தில் உள்ள கட்டிடத்தில் ஆண்டொன்றுக்கு 500 பேருக்கு வழங்குவதற்கு, அரசு ஆண்டொன்றுக்கு இப்படிப்புக்கான கட்டணம் ரூ.80,000 மற்றும் கூடுதல் செலவிடங்களுக்காக ரூ. 20,000 ஆக மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓராண்டு பட்டய படிப்புக்கான (P.G Diploma in Entrepreneurship and Innovation) பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதி முறைகள் மற்றும் இந்தப் படிப்பில் எந்த அளவுக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை இ.டி.ஐ இந்தியா அகமதாபாத் நிறுவனம் முடிவு செய்யும். பாடத்தின் ஒரு பகுதியை அவர்கள் நேரடியாக அவர்களுடைய பேராசிரியர்களை வைத்து நடத்துவார்கள். ஆங்கில மொழியில் இந்த ஓராண்டு பட்டைய படிப்பு நடத்தப்படவிருக்கிறது. ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களுக்கு இ.டிஐ.ஐ சென்னை சிறப்புப் பயிற்சி வழங்கும். 21 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளநிலை பட்டதாரிகள் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

அரசு அனுமதித்துள்ள இடங்கள் மொத்தம் 500. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதில் ஒரு உள் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது. 100 சதவீதம் அளவுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வழி இருக்கிறது. எனவே சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களும் இதில் பங்குபெறவாய்ப்பு இருக்கிறது. இந்தப் பயிற்சி தொழில் முனைவோர் உருவாவதற்கான படிப்பு. வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. எனவே மாவட்டந்தோறும் தொழில் முனைவோர் ஆக முயற்சி செய்யும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பாக அமையும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மிக எளிமையானது. இந்தப்பயிற்சி முழுவதும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் மிக உயர்ந்த தரத்தில் தரப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள், குறு, சிறுதொழில் சங்கங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள், எஸ்.சி/எஸ்.டி பிரதிநிதிகள், மகளிர் பிரதிநிதிகள், அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களாகிய அனைவரும் இக்கூட்டத்தில் பங்கு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...