காங்கேயம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது - மற்றொருவர் தப்பியோட்டம்

காடையூர் அருகே பசுவன் மூப்பன் வலசில் லோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 4 ஆடுகள் திருடிச் சென்ற ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரமே ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வைத்துக்கொண்டு வாழ்வாதாரம் நடத்துவதுதான். இந்த நிலையில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழிகளை இரவு நேரங்களில் திருடி செல்வது தொடர்கதையாகவே உள்ளது.

இந்த திருட்டுக்களை கட்டுப்படுத்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களே காவல் துறையினருடன் சேர்ந்து கடந்த சில மாதங்களாக ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில ஊர்களில் செக் போஸ்ட் அமைத்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் நேற்று காங்கேயம் காடையூர் அருகே பசுவன் மூப்பன் வலசில் லோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 4 ஆடுகள் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் காடையூர் அருகே அடுத்த தோட்டத்தில் திருடுவதற்கு சுமோ காரில் காத்திருந்த போது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சந்தேகித்து சுமோ காரை நோட்டமிட்டுள்ளனர்.

அதில் 4 ஆடுகள், இரண்டு குட்டிகள் இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் காரில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் திடீரெனெ இருவரும் காரை விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பியோடியுள்ளனர். இதில் ஒருவர் தடுக்கி கீழே விழுந்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டான்.

பின்னர் அவனையும் திருடுவதற்கு பயன்படுத்திய சுமோ காரையும் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் (30) மற்றும் முத்துராமன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஆடுகள் திருடப்பட்ட வழக்குகள் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இந்த திருட்டு சம்பவத்தில் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்ட இருக்கலாம் எனவும், அவர்களையும் காங்கேயம் காவல்துறையினர் விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...