ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை - விவசாயிகளுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

தென்னை விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், உற்பத்திசான்று ஆகிய ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவைக்கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.11.60/-க்கும், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.120/-க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் 14.03.2024 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர், ஆனைமலை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, காரமடை, செஞ்சேரி மலையடிப்பாளையம், சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக 31500 மெ.டன் அரவை கொப்பரையும், 800 மெ.டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், உற்பத்திசான்று ஆகிய ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம்.

வரும் (10.06.2024) உடன் கொப்பரை கொள்முதல் முடிவடைய உள்ளதால் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரையினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விற்பனை செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...