கார் வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பணம் செலுத்தி 5 நாள்களில் கார் விநியோகம் செய்வதாகக் கூறி, 4 மாதங்களாக காரை வழங்காததால், ஆதி கார் பிரைவேட் லிமிடெட் என்ற கார் விற்பனை நிலைய நிர்வாகம் ரூ.2 லட்சம், கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் சாகுல் ஹமீது என்பவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (40). இவர், சரவணம்பட்டியில் உள்ள ஆதி கார் பிரைவேட் லிமிடெட் கார் விற்பனை நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் வாங்க கடந்த 2022 மே மாதம் முன்பதிவு செய்தார். இதற்கு தனியார் வங்கிக் கடன் மூலமாக முழுத் தொகையும் சம்பந்தப்பட்ட கார் விற்பனை நிலைய நிர்வாகத்துக்கு காசோலையாக தரப்பட்டது.

முழுத்தொகை பெற்றுக் கொண்ட பிறகும், அந்த நிர்வாகம் சாகுல் ஹமீதுக்கு காரை வழங்காமல் அலைக்கழித்து வந்தது. இது குறித்து, சரவணம்பட்டி காவல் நிலையம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாகுல் ஹமீது புகார் அளித்தார். இதற்கிடையே பணம் செலுத்தி 4 மாதங்கள் கழித்து கார் விற்பனை நிலைய நிறுவனம் காரை, சாகுல் ஹமீதுக்கு வழங்கியது.

இதைத் தொடர்ந்து, காருக்கு முழுத்தொகை செலுத்தப்பட்டு வங்கிக்கு 4 மாதத் தவணைகள் செலுத்தப்பட்ட பிறகு காரை வழங்கியதால் வருமான இழப்பு, மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டதாகவும், இதற்கு உரிய நிவாரணம் வழங் கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை நுகர் வோர் நீதிமன்றத்தில் சாகுல் ஹமீது புகார் அளித்தார்.

கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இந்த வழக்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் மே 7-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், பணம் செலுத்தி 5 நாள்களில் கார் விநியோகம் செய்வதாகக் கூறி, 4 மாதங்க ளாக காரை வழங்காததால், ஆதி கார் பிரைவேட் லிமிடெட் கார் விற்பனை நிலைய நிர்வாகம் ரூ.2 லட்சம், கார் தயாரிப்பு நிறுவனமான புது தில்லியில் தலைமை அலுவலகம் வைத்துள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் சாகுல் ஹமீதுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சாகுல் ஹமீது தரப்பில் வழக்குரைஞர்கள் வி.ராஜசேகர், கே.எஸ்.ஐஸ் வர்யா ஆகியோர் ஆஜராகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...